மட்டக்களப்பில் இன்று டெங்கு ஒழிப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

 


 

 தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்புரைக்கு அமைவாக நாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில்
உள்ள சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனைகளுக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக இடம்பெறுகின்றன.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் ஜி .சுகுணனின் பணிப்புரையின் கீழ் மட்டக்களப்பு சுகாதார அலுவலக பிரிவில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு
வருகின்றன
டெங்கு நுளம்புப் பெருக்கம் அதிகமாக உள்ள பகுதிகளாக இனங்காணப்பட்ட மட்டக்களப்பு நொச்சிமுனை, நாவற்குடா , நாவற்குடா கிழக்கு ,மஞ்சந்தொடுவாய் தெற்கு பகுதிகளில் இன்று டெங்கு ஒழிப்புப்
பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
மட்டக்களப்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே .மாதவன் தலைமையில் இந்த டெங்கு ஒழிப்புப் பணிகள் இடம்பெற்றன.
டெங்கு நுளம்பு பெருக்கம் உள்ள இடங்களாக அடையாளங்காணப்பட்ட காணிகளின் உரிமையாளர்கள் மற்றும் வீட்டு உரிமையாளர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், உடனடியாக அவற்றை சுத்தப்படுத்துமாறும்
அறிவுறுத்தப்பட்டது.