கவனயீர்;ப்பு ஆர்ப்பாட்டம் பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய முன்றலில் நடைபெற்றது.

 


ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்குகிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெற முடியாத சமஷ்டியை வலியுறுத்துவதற்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஓரணியில் ஒன்றுபடவேண்டும் என்ற கோரிக்கையை முன்னெடுத்து கவனயீர்;ப்பு ஆர்ப்பாட்டம் பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய முன்றலில் நடைபெற்றது.

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் ஒருமித்தகுரலில் ஒலிக்கச் செய்வோம் எனும் தொனிப்பொருளில் இக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், கல்முனை இருதயநாதர் தேவாலயபங்குத்தந்தை தேவதாசன் அடிகளார், சிவஸ்ரீ நிலோஜன் குருக்கள், பெண்கள் வலையமைப்பினர், வடக்கு கிழக்கு ஒருங்ணைப்புக் குழு சமூகஆர்வலர் பிரகாஸ், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இக் கவனயீர்ப்பு ஆர்பாட்டம் ஆரம்பமாவதற்கு முன்னர் விசேட புலனாய்வுப் பிரிவினர், கல்முனை இராணுவத்தினர், பொலிஸார் அவ் இடத்திற்கு வருகை தந்திருந்தனர்.

குறித்த கவனயீர்ப்பு ஆர்பாட்டத்தினை நடத்துவதற்கான அனுமதி பெறப்பட்டதா? இதனை நடத்த முடியாது என தெரிவித்து பொதுமக்களுடன் முரண்பட்டுக் கொண்டனர். கல்முனைபொலிஸார் வீதியில் ஊர்வலமாகச் சென்று ஆர்பாட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என தெரிவித்ததுடன், அங்கு பொலிஸர், பொதுமக்களுக்கு இடையில் வாய்த்தர்க்கமும் நடைபெற்றிருந்தது.

குறித்தகவனயீர்ப்புபோராட்டம் தமிழ் தலைமைகளை ஒன்றிணைப்பதற்காகவே நடைபெறுவதாகவும், அரசாங்கத்திற்கு எதிராக அல்ல எனவும் பொதுமக்கள் தெரிவித்ததுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.