ராமர் கோவில் இடிக்கப்பட்டு அல்லாவின் பெயரில் மசூதி கட்டப்படும்- அல்குவைதா அமைப்பு

 


 அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் இடிக்கப்பட்டு மசூதி கட்டப்படும் என அல்குவைதா  அமைப்பு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக அல்குவைதா அமைப்பின் பத்திரிகையில் வெளியான செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியாவில் பல தசாப்தங்களாக முஸ்லிம்களின் உயிர், உடைமைகள் சார்ந்த அழிவை சந்தித்து வருகின்றனர். இதனால் மீண்டும் ஏற்படும் பொருள் இழப்பை பற்றி பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. இந்தியாவில் இழக்கப்பட்ட உயிரும், உடைமைகளும் ஜிகாத்துக்கு பயன்படுத்தி இருந்தால் இவ்வளவு இழப்புகள் ஏற்பட்டு இருக்காது. 

 இந்தியாவின் மதசார்பின்மை எனும் கொள்கை என்பது ஒரு நரகமாகும். ஏனென்றால் இந்து- முஸ்லிம் சகோதரத்துவ முழக்கங்கள் வெறும் பேச்சாக தான் உள்ளது. இதனால் இந்திய முஸ்லிம்கள் ஜிகாத்தை ஆதரிக்க வேண்டும்.

30 ஆண்டுகளுக்கு முன்பு பாபர் மசூதி இடிக்கப்பட்டது. 20 ஆண்டுகளுக்கு முன்பு கர்ப்பிணி பெண்களின் வயிற்றை வெட்டி எரித்தனர். அகமதாபாத்தில் (குஜராத்) கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் எரிக்கப்பட்டனர். இன்று எல்லா இடங்களிலும் புல்டோசர்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அலிகார் முதல் ஜாமியா உஸ்மானியா (ஹைதராபாத் புறநகர்) வரை அனைத்து இந்துக்களும் கத்திகள், ஈட்டிகள் மற்றும் வாள்களை கூர்மைப்படுத்துகிறார்கள். காய்கறி வெட்டும் கத்தியால் முஸ்லிம்களின் முகத்தையும் தலையையும் வெட்டுவது என்ற பேச்சு இந்துப் பெண்களின் வாயில் இருந்து கேட்கப்படுகிறது.

 

அல்குவைதா என்பது இந்திய துணைக் கண்டம் முழுவதும் இஸ்லாம் உலகத்தின் ஒரு பகுதியாக மாற வேண்டும் என்பதை விரும்புகிறது. இதன்மூலம் சிலை வழிபாடு நிறுத்தப்படும். இதற்கு ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள ஜாமியா மசூதி முதல் பாபர் மசூதி வரை ஜிகாத் தான் ஒரே தீர்வாக இருக்கும்.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டு ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. அதேபோல் ராமர் கோவில் இடிக்கப்பட்டு அல்லாவின் பெயரில் மசூதி கட்டப்படும்'' என்பன உள்பட பல்வேறு விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.