மனமது செம்மையானால் நினைத்தது நிகழும்…! நிகோஷ்..






உடலின் வலிமையைவிட, உள்ளத்தின் வலிமையே ஆற்றல் மிக்கது என்பது அனைத்து
வெற்றியாளர்கள் ,மகான்கள், சித்தர்கள் சொல்லி வைத்த விடயம்.
மனதினை திறம்பட செய்யும் போது அதன் அபரிதமான ஆற்றல்களினால் உங்களை நீங்களே
உயர்த்திக் கொண்டே இருக்க முடியும்.
தறிகெட்டு திரியும் மனதினை கடிவாளம் இட்டு உன்பக்கம் திருப்புகையில் அதன் ஆற்றலை கண்டு
நாமே ஆச்சர்யபடும் நிலை ஏற்படும்.

‘’ சிந்தை தெளிய வல்லார்க்கு சிந்தையுள்ளே சிவன் இருந்தானே ’’

மனம் போக்குதான் எல்லாமே..!
ஒரு நாளில் ஓர் சாதாரண மனிதனின் மனதில் 80,000 - 90,000 வரையான எண்ணங்கள் தோன்றி
மறைகின்றன. அதில் 85,000 எண்ணங்கள் எதிர்மையான எண்ணங்களும் , நினைவுகளும் ,
கற்பனைகளுமே தோன்றுகின்றன என்று உளவியல் ஆய்வாளர்களின் கருத்து.
இவ் எதிர்மறையான எண்ணங்களின் காரணமாகவே ஒருவரின் வாழ்க்கை நிலை எதிர்மறையை
எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது .
இது எவ்வாறு சாத்தியம் என்று ஆய்வு செய்கையில் எதிர்மறையான எண்ணங்களை ஒருவர்
மனதில் சுமந்து கொண்டு ஓர் செயலை செய்யும் போது அதன் விளைவுகளும் எதிர்மறையாகவே
ஏற்படுகின்றன . தோல்வி , விரக்தி , கவலை போன்ற நிலை ஏற்படுகின்றது.

'' தீதும் நன்றும் பிறர் தர வாரா ''
என்பது புறநானுற்று பாடல்களில் ஒன்று.
பிறரை குறைகூறமால் தன் எண்ண போக்கினை மாற்றி அமைத்தால் வெற்றிகள் தன வசப்படும்.
எண்ணங்களை கட்டுப்படுத்துபது என்பது ஓர் சாதாரண மனிதனுக்கு பெரும் சவாலான விடயம்
தான் . நிகழ்கால வணிக உலகில் சவால்கள் என்பது மிகவும் மலிந்தே இருக்கின்றன. இவை ஓர்
மனிதனின் மனதில் , எண்ணங்களில் எதிர் விசையை இலகுவில் ஏற்படுத்தும்.
இந்த எதிர் விசைகளை எவர் வெற்றிகரமாக எதிர்கொள்கின்றாரோ நிச்சயம் அவரின் மனம்
ஆனந்தம் அடையும் வாழ்க்கையும் அர்த்தமாகமாறும்.

'' உலகம் மிகப்பெரியது , வாழ்க்கை மிக சிறியது ''
ஆய்வுகளின் படி உலகில் அதிகமானோர் தங்களின் கடந்த காலங்களை நினைத்து கொண்டும் ,
எதிர்காலத்தை அதிகளவில் திட்டமிட்டு கொண்டும் , தங்களின் நிகழ்காலத்தை இழந்து
விடுகின்றனர்.

“இந்த நிமிடம் இந்த நாளினை வாழ்ந்து முடி நண்பா..!
பின்னர் நாளை பொழுதினையும், எதிர்காலதையும் பற்றி சிந்திக்காலாம்
என்பது  வெற்றியாளர்களின் மகுட வாக்கியம்.
எதிர்காலம் பற்றி அதிகம் சிந்திக்கும் போது பல எதிர்மறையான விசைகள் உள்வாங்கும் இதனால்
பல எதிர்மறை எண்ணங்கள் தோன்றும் மனம் அமைதியை இழக்கும்.
இப்படி ஒவ்வொருவரின் எதிர்மறையான எண்ணங்களே ஒவ்வொருவரின் வாழ்கையை புரட்டி
போடுகின்றது.
வேக வேகமாக செல்லும் அறிவியலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் மனம் உழைச்சல்
அடைகிறன்றது இதனால் உடல் பாதிப்பு அடைகின்றது.
எண்ணங்களின் வழியே தான் எல்லாம்..
உங்களின் ஆனந்தமான வாழ்க்கை உங்களின்  மனதில் தோன்றும் நேர்மறையான
எண்ணங்களும், நேர்மறையான வார்தைகளும் தான்.
நேர்மறை எண்ணங்களை நம்மில் உருவாக்க, அதிகரிக்க செய்யும் ரகசியம் சில உங்களுக்காக......
 “ ஆன்மிகமும் அறிவியலும் இணைந்த ரகசியம் “
01. சுவாசம் / பிராணன் / kapalvathya
“Connections bet been breath & the mind.”
மனிதனின் ஒவ்வொரு உணர்வுகளுடன் சுவாசம் கொண்டுள்ளது.
நன்றாக அவத்கானித்து பார்த்தால் மனித உணர்வுகள் ஒவ்வொன்றும் சுவாசத்துடண் தொடர்பு
கொண்டவை.
“When you inhale your breath feel that your taking in positives
When you exhale your breath feel that your releasing the negativity “
கோபம் உணர்வு வரும்போது சுவாசம் உங்களை அறியாமல் அதிகம் செயற்படும்.

ஆனந்தமாக / மகிழ்வாக இருக்கும் போது சுவாசம் சீராக செயற்படும்.
அதிக யோசனை / சிந்தனை / குழப்பமான சூழல் / மன அழுத்ததில் இருக்கும் போது சுவாசம்
நிலைமாறி இயங்கும்.
02. பிறருடன் உங்களை ஒப்பிடுபதனை நிறுத்துங்கள்.
மனிதன் ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவம் இருக்கின்றது அதில் ஒவ்வொருவரும் சிறப்பியல்பு
கொண்டவர்களே..!
பிறருடன் ஒப்பிட்டு பார்க்கும் போது தேவை அற்ற மன குழப்பங்கள் ஏற்படும்.
03.அதிகாலையில் எழுந்து கொள்ளுங்கள்...
பெரும் செல்வந்தர்கள், வெற்றியாளர்களின் பெரும் ரகசியங்களில் ஒன்று.
குறைந்தது 4.30 - 5.30 வரையான நேரதில் எழுந்து கொள்ளுதல். அதில் முதல் 100 நிமிடங்கள்
உங்களுக்காக ஒதுக்கி கொள்ளுதல்....
1வது 20 நிமிடம் - உடல் கழிவுகளை  வெளியேற்றல்.
2வது 20 நிமிடம் - சுவாசம் , உடல் உறுப்புகளை செயற்படுத்த.
( yoga / வர்மக்கலை )
3வது 20 நிமிடம் - ஆழ்மனதில் நேர்மறை எண்ணங்களை பதிவு செய்தல்.
4வது 20 நிமிடம் - குறிப்பிட்ட நாளை திட்டமிடல்.
5வது 20 நிமிடம் - குடும்பதுடன் செலவிடல்.
04.ஆழ் நிலை தியானம் / Alpha mind meditations.

05. இயற்கையோடு இணைந்து இருங்கள்.
வாரத்தில் / மாதத்தில் ஒரு முறையேனும் இயற்கையான இடங்களுக்கு சென்று வாருங்கள்.
சுத்தமான காற்றை சுவாசிக்க கூடிய இடங்களுக்கு செல்லுங்கள்.
உங்கள் மனம் அமைதி அடையும் , மகிழ்வான மன நிலை உண்டாகும்.
06.அதிக நேரம் சமுக ஊடகளில் உலாவருபதை தவிர்த்தல்.
இன்றையகாலத்தில்அதிக நேரம் சமுக ஊடகங்களில் செலவு செய்பதனால் அதில் பல
எதிர்மறையான விடயங்களே பகிரப்படும், அதனை பார்பவர்களுக்கு எதிர்மறையான
சிந்தனைகள் அவர்களை அறியாமலே உள்வாங்கி கொள்கின்றனர்.

மேற் கூறிய விடயங்கள் எல்லாம் மனதினை திறம் படுத்த கூடிய ,செயற்படுத்த கூடிய ஒரு சில
விடயங்களே..!
நிகழ்கால நவீன உலகில் (modern world) சுற்றிவர எதிர்மறை விசைகளே அதிகம் உள்ளன, இது
பெரும் சவாலான விடயம் தான்..
உங்களின் மனதில்,உங்களின் உள் உணர்வு என்ன சொல்கின்றதோ அதை திட்டமிட்டு சரியாக
செயற்படுத்தே சிறந்தது..
ஒரு காரியம் செய்ய முற்படும் போது பல எதிர்மறையான கருத்துக்கள் பலர் முன்வைப்பர், எதிர்
விசைகள் தாக்க கூடும்..
இருப்பினும் உங்களின் உள் உணர்வு எது சரி என கூறுகின்றதோ அதனை சரியான முறையில்
செயற்படுத்துங்கள்...
வெற்றி உங்களை தொடரட்டும்...!
சிந்தையது என்னச் சிவனென்ன வேறில்லை
சிந்தையின் உள்ளே சிவனும் வெளிப்படும்
சிந்தை தெளியத் தெளியவல் லார்கட்குச்
சிந்தையின் உள்ளே சிவனிருந்தானே.
திரு மந்திரம் - 2853
“நல்லது நடக்கும், நன்மைகள் பெருகும்”

நன்றி..
ஆய்வுகளுடன்...
நிகோஷ்..