கொடுப்புலி ஒன்று திருகோணமலை மாவட்டத்தில் பிடிக்கப்பட்டுள்ளது.

 


( த பிஸ்ஸிங் கெட் )என அழைக்கப்படும் மீன்பிடி பூனை(அரிய வகை புலி) இனம் திருகோணமலை மூதூர் 64 ஆம் கட்டை ஜபல் நகர் பகுதியில் ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது


இவ்வாறு பிடிக்கப்பட்ட இப்பூனையை மீன்பிடி பூனை என அழைக்கப்படுவதுடன் வன ஜீவராசிகள் திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் இப்பகுதியில் நீண்ட காலமாக வீடுகளில் உள்ள கோழி உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடி வந்த நிலையில் பொதுமக்களினால் கடந்த டிசம்பர் 2 திகதி அன்று பிடிக்கப்பட்டு வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இப்பூனையினால் தாம் பல்வேறு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

இந்த மீன்பிடிப் பூனை இலங்கையில் கொடுப்புலி என அழைக்கப்படுவதுடன் ஒரு நடுத்தர காட்டுப்பூனையாக குறிப்பிடப்படுகின்றது.

இது தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படுகின்றன.