மருந்துகளின் விலை குறைப்பு தொடர்பான பட்டியலை தயாரிப்பதற்கு குழுவொன்றை நியமிக்குமாறு பணிப்புரை.

 


நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மருந்துகளின் விலை அதிகரித்து காணப்படுகின்றது. இதனால் நோயாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையில்,  மருந்துகளின் விலை குறைப்பு தொடர்பான பட்டியலை தயாரிப்பதற்கு குழுவொன்றை நியமிக்குமாறு அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சர் இது தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்கியதாக  அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.