பிரபல தமிழ் தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை பரப்புவதை தவிர்க்குமாறு காவல்துறை ஊடகப் பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.

 


பிரபல தமிழ் தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் ஊடகங்களில் பல்வேறு உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் பரப்பப்படுவது விசாரணைகளுக்கு இடையூறாக அமையும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான நிலைமை சந்தேக நபர்களுக்கு நன்மை பயக்கும் எனவும் காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

 இதனால், உறுதிப்படுத்தப்படாத தகவல்களை பரப்புவதை தவிர்க்குமாறு காவல்துறை ஊடகப் பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.