போக்குவரத்து குற்றங்களுக்கான குற்றப் புள்ளி முறையை ஜனவரி மாதம் முதல் அறிமுகப்படுத்தவுள்ளது

 


போக்குவரத்து குற்றங்களுக்கான குற்றப் புள்ளி முறையை ஜனவரி மாதம் முதல் அறிமுகப்படுத்தவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க உறுதிப்படுத்தினார்.

நாட்டில் இடம்பெறும் வாகன விபத்துக்களின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் குற்றப் புள்ளி முறை அறிமுகமாகவுள்ளதாகவும் இந்த முன்மொழிவு அமைச்சரவையின் அனுமதிக்காக  விரைவில் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

முன்மொழியப்பட்ட முறையின்படி, 32 போக்குவரத்துக் குற்றங்களுக்கு குற்றப் புள்ளிகள் வழங்கப்படும் என்றும் சாரதியொருவர் 20 புள்ளிகளைப் பெற்றால் அவரது சாரதி அனுமதிப் பத்திரம் ஒரு வருட காலத்துக்கு இடைநிறுத்தப்படும் என்றும் குறிப்பிட்டார்.

150 கிலோ மீற்றர் வேகத்தில் வாகனம் செலுத்தினால் எட்டு புள்ளிகளும், வீதி விபத்தை ஏற்படுத்திய பின்னர், ஒரு நபர் அங்கிருந்து தப்பிச் சென்றால் 10 புள்ளிகள் சேர்க்கப்படும் வழங்கப்படும் என்றும் தெரிவித்த அவர், அனுமதி கிடைத்தவுடன் உத்தேச புள்ளி விபரம் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.