விழிப்பூட்டல் பேரணியும் மாற்றுத் திறனாளிகள் நிகழ்வும் வவுணதீவில் இடம்பெற்றது.

 


 

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மண்முனை மேற்கு, வாழ்வகம் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினால் நடாத்தப்பட்ட விழிப்பூட்டல் பேரணியும் மாற்றுத் திறனாளிகள் நிகழ்வும் வவுணதீவில் இடம்பெற்றது.
வாழ்வகம் மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் தலைவர் பாலகப்போடி தலைமையில் இந்நிகழ்வுகள் நடைபெற்றது.

வாழ்வகம் மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் ஏற்பாட்டில் அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களின் உதவியுடன் இடம்பெற்ற இந் நிகழ்வில், வவுணதீவு சந்தியிலிருந்து மாற்றுத் திறனாளிகள் அலுவலகம் வரை, மது போதைப் பொருள் பாவதை தடுப்பு விடயத்தினை முன்வைத்து அமைதிப் பேரணியும் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், உதவி பிரதேச செயலாளர் சுபா சதாகரன், மண்முனை மேற்கு பிரதேச சபை தவிசாளர் சண்முகராஜா, உதவி தவிசாளர் செல்லத்துரை, வங்கி முகாமையாளர் பிரியதர்சன், மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் தலைவர் ஜீவராஜா மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

இந் நிகழ்வின் போது மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் தெரிவு செய்யப்பட்ட சில குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்களும் மாணவர்களுக்கு புத்தகப் பைகளும் வழங்கி வைக்கப்பட்டது.