துப்பாக்கி பிடிக்கும் கரங்கள் வலிமையானதில்லை, கண்ணீரை துடைக்கும் விரல்கள் தான் வலிமையானது.

 


உங்கள் அரசியல் தலைமைகளை தேர்வு செய்வதில் கவனமாக சிந்தித்து தேர்ந்தெடுங்கள்.

தேர்தல் சமயத்தில் ஊடகங்களை நம்பாதீர்கள். அத்தனை ஊடகங்களும் ஏதேனும் ஒரு கட்சிக்கு விலை போயிருக்கும்.

குறைந்தபட்சம் உங்கள் நாட்டின் அரசியலமைப்பு முழுவதையும் படிக்க முடியாவிடினும், அடிப்படை உரிமைகளை மட்டுமேனும் தெளிவாக தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

சமூக வலைத்தளங்கள் என்பதை உங்களது புறத்தோற்றத்தை விளம்பர படுத்தும் ஒரு களமாக கருதாமல், உங்கள் அகத்தின் உணர்வுகளை வெளிப்படுத்தும் களமாக பயன்படுத்துங்கள்.

போர் நடைபெறும் இடத்திலிருந்து செல்பி வேண்டாம், மாறாக அந்த போர் நடைபெறும் சூழலை பற்றிய உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.

துப்பாக்கி பிடிக்கும் கரங்கள் வலிமையானதில்லை,

கண்ணீரை துடைக்கும் விரல்கள் தான் வலிமையானது.

இதனை உணருங்கள்.

குண்டுகள் விழுந்து ஏற்படும் குழிகள் அழகானவையல்ல,

அந்த குண்டுகள் விழுவதற்கு முன் அந்நாட்டு குழந்தைகளின் முகச்சிரிப்பில் விழும் கன்னக் குழிகள் தான் அழகு.

ஆறறிவு வேண்டாம் இதற்கு ஓரறிவு போதும்.

இந்த உலகம் உங்களுடையது மட்டுமல்ல, உங்கள் சந்ததிகளுடையதும் கூட.