சமீபத்திய அரசு எதிர்ப்புப் போராட்டங்களுடன் தொடர்புடைய இரண்டாவது மரண தண்டனையை நிறைவேற்றியதாகவும் அதில், 23 வயது இளைஞரை பொது வெளியில் பகிரங்கமாகத் தூக்கிலிட்டதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.
மாஜித்ரேசா ரஹ்னாவார்ட், 23 வயதான இளைஞர். அவர் மாஷாத் நகரில் திங்கள் கிழமையன்று அதிகாலை தூக்கிலிடப்பட்டதாக நீதித்துறை தெரிவித்துள்ளது.
துணை இராணுவப் படைகளில் ஒன்றான பாசிஜ் எதிர்ப்புப் படையை (Basij Resistance Force ) சேர்ந்த இருவரை குத்திக் கொன்றதைக் கண்டறிந்த நீதிமன்றம் “கடவுளுக்கு எதிரான குற்றம்” என்று அவருக்கு எதிராகத் தீர்ப்பளித்தது.