சமாதான நீதவான்களுக்கான. சமூக சமய கருத்தரங்கொன்று மண்முனை பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

 


மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சமாதான நீதவான்களுக்கான. சமூக சமய கருத்தரங்கொன்று மண்முனை பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் இந்த செயலமர்வு இடம்பெற்றது.

மாவட்டத்திலுள்ள சமாதான நீதவான்களுக்கிடையில் ஐக்கியம் சகோதரத்துவம் சமூக ஒற்றுமை என்பவற்றை ஏற்படுத்தும் வகையில் இந்த கருத்தரங்கு நடைபெற்றது.

இதில் மண்முனைப் பற்று பிரதேச செயலாளர் சத்தியானந்தி இந்த கருத்தரங்கை ஆரம்பித்து வைத்தார்.

இதில் சமய சமூக பிரமுகர்கள் முக்கியஸ்தர்கள் சமாதான நீதவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்த கருத்தரங்கில் முன்னாள் நீதிபதியும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான கபூர் விஷேட உரை நிகழ்த்தியதுடன் சிறப்புரைகளும் இடம் பெற்றன.