மட்டக்களப்பு மாவட்ட செயலக எல்லே விளையாட்டு வீராங்கனைகளால் அன்பளிப்பு வழங்கல்!!

 







 
செங்கலடி பிரதேச செயலகப் பிரிவில் உள்ள கரடியனாறு மட்/ம மே/சுவாமி ஆத்மகணானந்தா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவ,மாணவிகளுக்கு மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர்களான திருமதி.சுதர்ஷினி ஸ்ரீகாந்த், திருமதி.நவரூபரஞ்சினி முகுந்தன் ஆகியோரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் அன்பளிப்புக்கள் வழங்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்ட 14 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இடையில் இடம்பெற்ற அரசாங்க அதிபர் வெற்றிக் கிண்ணத்தில் எல்லே போட்டியில் மாவட்ட செயலக வீராங்கனைகள் இரண்டாம் இடம் பெற்றுக்கொண்டனர்.
அவர்கள் பெற்றுக்கொண்ட பரிசுத் தொகை மற்றும் எல்லே விளையாட்டு அணி வீராங்கனைகளினால் வழங்கப்பட்ட நிதியினால் அன்பளிப்பு பொருட்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் பிரதேசத்திலுள்ள முன்பள்ளி சிறுவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கினார்கள். அத்துடன் பின்தங்கிய பிரதேசத்தில் வாழும் முதியவர்கள் மற்றும் விசேட தேவையுடைய மாணவர்களுக்கும் உலர் உணவு பொருட்கள்,ஆடைகள் வழங்கப்பட்டன.
இந் நிகழ்வில் செங்கலடி பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எ.கருணாகரன்,மட்/ம மே/சுவாமி ஆத்மகணானந்தா வித்தியாலயத்தின் அதிபர்.மு.சண்முகம்,மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர் என பலர் கலந்து கொண்டனர்.