55 ரூபாவுக்கு முட்டை வாங்கலாம் .

 


முட்டை ஒன்றின் விலையை 50 - 55 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்வதற்கு கோழி இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் இணக்கம் வெளியிட்டுள்ளது.

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில்  இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் ஏனைய சங்கங்களுடன் கலந்துரையாடி இது தொடர்பில் இறுதி தீர்மானத்தை மேற்கொள்வதாக அந்த சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.