அமெரிக்க சர்வதேச மருத்துவ சுகாதார நிறுவனம் (IMHO- USA) கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு 500 கண்வில்லைகளை வழங்கியுள்ளது.
கல்முனை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் இரா முரளீஸ்வரன் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, இந்தக் கண் வில்லைகள் வழங்கிவைக்கப்பட்டன.
சர்வதேச சுகாதார வைத்திய நிறுவனத்தின் பொருளாளர் முரளி ராமலிங்கம் (கணக்காளர்) நேற்று முன்தினம் (07) நேரடியாகவே வைத்தியசாலைக்கு விஜயம் செய்து இந்தக் கண்வில்லைகளை வழங்கினார்.
இந்நிகழ்வில், ஆதார வைத்தியசாலையின் பிரதி வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஜெ. மதன், நிறுவனத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் எந்திரி ஹென்றி அமல்ராஜ், வைத்தியசாலையின் நிர்வாக உத்தியோகத்தர் தேவ அருள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.