(கனகராசா சரவணன்)
வியட்நாம்
தடுப்பு முகாமில் இருந்து விசேட விமான மூலம் இன்று வியாழக்கிழமை (28)
அதிகாலை கட்டுநாயக்கா விமான நிலையம் வந்தடைந்த 151 பேரையும் சிஜடி
விசாரணையின் பினனர் அவர்களை விடுவிக்கப்படும் என பொலிஸ் உயர் அதிகாரி
ஒருவர் தெரிவித்தார்.
கடந்த நவம்பர் 8ம் மியான்மாரில் இருந்து
சட்டவிரோதமாக இலங்கையைச் சேர்ந்த 303 பேர் கனடாவுக்கு படகில் சென்றபோது
படகு கடலில் மூழ்கும் நிலையில் காhப்பாற்றப்பட்டு வியட்நாம் தடுப்பு
முகாமில் தடுத்துவைக்கப்பட்டனர் இதில் மீண்டு நாட்டுக்கு திரும்ப விருப்பம்
தெரிவித்து 151 பேர் கோரினர்
இதனையடுத்து உலக மீள்குடியேற்ற
ஸ்தாபனமான (ஜ.எம்.ஓ) அமைப்பு அனுசரணையுடம் நேற்று புதன்கிழமை மியான்மாரில்
விசேட விமான மூலம் 142 ஆண்கள் 9 பெண்கள் உட்பட 151 பேர் கட்டுநாயக்காக
விமான நிலையத்தினை இன்று அதிகாலை 3 மணியளவில் வந்தடைந்தனர்.
இவ்வாறு
நாடு திரும்பியவர்கள்;; வவுனியா கொழும்பு யாழ்ப்பாணம் உள்ளிட்ட சட்டவிரோத
ஆள்கடத்தல் முகவர்கள் ஊடாக 3 ஆயிரம் தொடக்கம் 5 ஆயிரம் டோலர்களை வழங்கி
இங்கிருந்து விமான மூலம் மியான்மாருக்கு சட்டபூர்வமாக
சென்றடைந்துள்ளதாவும்.
பின்னர் அங்கிருந்து கனடாவுக்கு படகில்
சட்டவிரோதமாக பயணித்துள்ளதாக சிஜடி யினர் விசாரணையில் தெரிய வந்துள்ளதுடன்
அவர்களை விசாரணையின் பின்னர் நாளை வீடுகளுக்கு செல்ல அனுமதிகப்படும் என
அவர் தெரிவித்தார்.





