13வயது சிறுமி துஷ்பிரயோகம் 35 வயது தந்தை கைது .

 


இரண்டு வருடங்களுக்கு மேலாக தந்தையின் துஷ்பிரயோகத்தை பொறுத்துக்கொள்ள முடியாத 12 வயது பதின்ம வயது சிறுமி 12 கிலோமீற்றர் தூரம் தனியாக நடந்து சென்று கல்னாவ காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து சந்தேகநபரான தந்தை, பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றநிலையில் கைது செய்யப்பட்டதாக கல்னாவ காவல்துறையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் கம்பளை பிரதேசத்தில் வசித்து வந்த 35 வயதுடைய முன்னாள் இராணுவ சிப்பாய் எனவும் மூன்று மாதங்களுக்கு முன்னர் கல்னாவ பிரதேசத்திற்கு குடிபெயர்ந்தவர் எனவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். 

 சம்பவத்தை எதிர்கொண்ட சிறுமியை 10 வயது முதல் (2019) தற்போது வரை தந்தை பல சந்தர்ப்பங்களில் துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.