நீதிமன்றத்திலுள்ள வழக்குகள் தொடர்பான செய்திகளை ஊடகங்களில் வெளியிடுவதை நீதிமன்றத்தின் மூலம் தடைசெய்ய திட்டம்

 


நீதிமன்றத்திலுள்ள வழக்குகள் தொடர்பான செய்திகளை ஊடகங்களில் வெளியிடுவதை நீதிமன்றத்தின் மூலம் தடைசெய்வதற்கான திட்டம் தொடர்பில் ஆராய்ந்து வருவதாக நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்ச  நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். 

பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பான வழக்கு விடயத்தில் ஊடகங்கள் மிக மோசமாக செயற்படுவதாகவும் அமைச்சர் சபையில் சுட்டிக்காட்டியுள்ளார். 

நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற போதைப் பொருள் தொடர் பான திருத்த சட்டமூலங்கள் மீதான விவாதத்தில் உரையாற்றிய ரோஹினி குமாரி கவிரத்ன எம். பி எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.