சிவானந்தா தேசிய பாடசாலை இராமகிருஸ்ண மிஷன் தோற்றம் பெற பெரும் பங்களிப்பு நல்கி நினைவில் நிற்கும் பெரியார். கதிர்காமத்தம்பி உடையார் வேலுப்பிள்ளை.

 

பிரபா  பாரதி
அன்னை பேச்சித்தாயாரின் அருட்கடாட்சத்துடன் கல்லடி பிரதேசத்தில்
சிவானந்தா தேசிய பாடசாலை, இராமகிருஸ்ண மிஷன்
தோற்றம் பெற பெரும் பங்களிப்பு  நல்கி நினைவில் நிற்கும் பெரியார்.
கதிர்காமத்தம்பி உடையார் வேலுப்பிள்ளை அவர்களின்  நினைவு தினமாகும்

சமயம்  கல்வி சமூகப்பணிகளில் தன்னை அர்ப்பணித்து அன்பைப் பெற்ற அமரர்.K.O  வேலுப்பிள்ளை அவர்கள் இறையடி சேர்ந்து இன்று 68 வருடங்கள் ஆகின்றது. இன்றைய   நாளில் அவரையும்  அவரது சேவைகளையும் நினைவு கூறுவது நன்றி உணர்வுள்ளவர்களின்   பொறுப்பும் கடமையுமாகும்.

1.    14 வருடங்கள் விவேகானந்தா பாடசாலையின் முகாமையாளராக சேவையாற்றியவர்.  (1917-1931)


2.     32 வருடங்கள் ஸ்ரீ சித்திவிநாயகர் , ஸ்ரீ பேச்சியம்மன் ஆலய முகாமையாளர்
பதவியிலிருந்து சொந்த நிதியில் ஆலயத்தை நிர்வகித்து அபிவிருத்தி செய்து
1947ம் ஆண்டு கல்லடி உப்போடை நொச்சிமுனை மக்களின் கையில் நிர்வாகத்தை   ஒப்படைத்தவர். (1918-1950)

3. தற்போது ஓலைக்குடிசையிலிருந்து அருள் பாலிக்கும் பேச்சிஅம்மன் விக்கிரகத்தை  இந்தியாவிலிருந்து எடுத்து வந்து மாம்பழக்குருக்கள் மூலம் பிரதிட்டை செய்து வைத்தவர்.

4. ஸ்ரீ நாகதம்பிரான் ஆலயத்தையும்  தீர்த்தக்குளத்தையும் சொந்தக்காணியில்
சொந்தச்செலவில் அமைத்தவர்.


5. பேச்சித்தாயாரின் அருட்கடாட்சத்துடன் சுவாமி விபுலானந்தரை கல்லடி பிரதேசத்திற்கு  அழைத்து வந்தவர்.

6. சிவானந்தா தேசிய பாடசாலையை சொந்த செலவில் சொந்த காணியில் அமைத்தவர்.


7. இராமகிருஸ்ணமிஷன்  விடுதி,  மைதானம் என்பவை தோற்றம் பெற வேண்டும் என்ற   நோக்கில் நில வசதிகளையும்  பொருளாதார ஆதரவையும் வழங்கியவர்.

8. கல்லடி பிரதேசத்தில் இராமகிருஸ்ண மிஷன்  செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படாத   காலகட்டத்தில் வண்ணார் பண்ணையிலிருந்து இல்ல மாணவர்களை சுவாமி   விபுலானந்தர் அழைத்து வந்த போது தனக்கு சொந்தமான ராஜ்மஹால் இல்லத்தை   வழங்கியவர்.


9.   பின்னர் சிவானந்தா பாடசாலை ஆசிரியர்களும் மாணவாகளும் தங்குவதற்கு
விடுதிக்காக அவ் இல்லத்தை வழங்கியவர்.

10. கல்லடி பிரதேச மக்களுடன் இணைந்து சுவாமி விபுலானந்தருக்கு ஸ்தாபகர் என்ற  கௌரவத்தையும்  அந்தஸ்த்தையும் வழங்கியவர்.

 
11. சுவாமி விபுலானந்தர் பேச்சியம்மன் வளாகத்தில் வைத்து தெரிவித்த விருப்பின் படி சுவாமியின் புகழ் உடலை தகனம் செய்ய விடாமல் கல்லடி பிரதேச மக்களுடன்   இணைந்து சமாதி வைக்க முன்னின்று செயற்பட்டவர்.

12. முறக்கட்டாஞ்சேனை வித்தியாலயத்தை சொந்த செலவில் சொந்த
காணியில் (தற்போதைய இராணுவ முகாம்)  ஸ்தாபித்தவர்.
சமூகத்தை நேசித்து சமூகத்திற்காக தன்னை அர்ப்பணித்த பெரியார்
வேலுப்பிள்ளையை நினைவு கூர்ந்து   அவர்கள் காட்டிய வழியில் சமூக சேவையை   புரிவோம்.