வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் வாகன விபத்து , மனைவி உயிரிழந்தார் கணவன் படு காயம் .

 


வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாலைநகர் பிரதான வீதியில், நேற்றிரவு 9.30 மணியளவில் மோட்டார் சைக்கிளும் படி ரக வாகனமொன்றும் மோதி விபத்துக்குள்ளாது. இதில், மனைவி பலியானார். அவரது கணவன் கடும் காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஐந்து பிள்ளைகளின் தாயான 46 வயதுடைய உசனார் ஆமினா உம்மா என்பவரே பலியாகியுள்ளார்.

வாழைச்சேனை பகுதியிலுள்ள மகளின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற கணவன் – மனைவியும், பாலைநகரிலுள்ள தங்களது வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது பின்பாக வந்த படி ரக வாகனம், மோட்டார் சைக்கிளில் ​மோதியுள்ளது.

மோட்டார் சைக்கிள் நிலைத்தடுமாறி கீழே விழுந்துவிட்டது. இதன்போது, மனைவி உயிரிழந்துள்ளதாக விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

உயிரிழந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்தில் படுகாயமடைந்த கணவர் ஆதம் பாவா உசனார், ​அதே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

 படி ரக வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவித்த   வாழைச்சேனை பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.