ஓமான் ஆட்கடத்தலுடன் தொடர்பிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்ட ஓமானுக்கான இலங்கை தூதரகத்தின் மூன்றாம் நிலை செயலாளரின் இராஜதந்திர வெளிநாட்டு கடவுச்சீட்டு முடக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறை அமைச்சினால் அவரது வெளிநாட்டு கடவுச்சீட்டு முடக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
குறித்த அதிகாரி சாதாரண கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டு நாட்டிற்கு வருகை தர முடியும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளரும் ஊடகப்பேச்சாளருமான காமினி செனரத் தெரிவித்துள்ளார்.





