திருகோணமலையில் ஊடகவியலாளர்களினால் துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

 


ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனை இன்மையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான சர்வதேச தண்டனை விலக்களிப்பு தினத்தை முன்னிட்டு திருகோணமலையில் ஊடகவியலாளர்களினால் துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த நிகழ்வு திருகோணமலை பிரதான பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்பாக இன்று காலை இடம்பெற்றது.

ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனை இன்மையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான சர்வதேச தண்டனை விலக்களிப்பு தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் சுதந்திர ஊடக இயக்கத்தின் வழிகாட்டலில் திருவோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தினால் நாட்டில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள்,ஊடக ஊழியர்கள் கலை கலாச்சார செயற்பாட்டாளர்களது கொலைகளுக்கான விசாரணைகளும் இதுவரை மேற்கொள்ளப்படாமையையும் அதற்கான விசாரணை அறிக்கை வெளிவராமையையும் கண்டித்து குறித்த துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

தண்டனை விலக்களிப்புக்கு எதிர்ப்பைத் தெரிவியுங்கள்! ஊடகவியலாளர்களிடமிருந்து ஒரு வேண்டுகோள்.. எனும் தலைப்பில் குறித்த துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.