இளம் மீனவர்களை வலுப்படுத்துதல் மற்றும் சட்டவிரோத மீன்பிடி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் தொடர்பில், செயலமர்வு மட்டக்களப்பில் நடைபெற்றது.

 

 






 






இளம் மீனவர்களை வலுப்படுத்துதல் மற்றும் சட்டவிரோத மீன்பிடி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் தொடர்பில், மட்டக்களப்பு மாவட்ட இளம் மீனவர்களுக்கான செயலமர்வு  மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு கடற்தொழில் நிரியல்வள திணைக்களத்தின் ஒன்றுகூடல் மண்டபத்தில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு கடற்தொழில் நிரியல்வள திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் எல்.சிறிரஞ்சன், மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் தலைவர் யே.யாட்சன் பிகிறாடோ, திட்ட  முகாமையாளர் சூ. செ. ஜான்சன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கடல்தொழில்சார் சட்டங்கள்,மீன்பிடிக்க தடைசெய்யப்பட்ட உபகரணங்கள் பாவித்தல், அனுமதி இன்றி கடற்தொழில் உபகரணங்கள் வைத்திருக்கும் செயல்கள்,தடைசெய்யப்பட்ட கடல் உயிரினங்களைப் பிடிப்பது போன்றவற்றிற்கான சட்டங்கள் மற்றும் மீன்பிடிக்கான அனுமதிப் பத்திரங்களின் அவசியம் போன்ற விடயங்கள் குறித்து இளம் மீனவர்களுக்கு விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

வடக்கு–கிழக்குப் பகுதிகளில் மீனவ சமூகம் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. ஆனால் இக்காலத்தில் கடல் வளங்கள் இயற்கை மற்றும் செயற்கை காரணங்களால் வேகமாக அழிந்து வருகின்றன. அந்த வளங்களைப் பாதுகாக்க சிவில் சமூக அமைப்புகள் மற்றும் மீனவ சமூகங்கள் இணைந்து செயற்படுகின்றன. அதற்காக இளம் மீனவர்களுக்கு பொறுப்புணர்வும் விழிப்புணர்வும் ஏற்படுத்தும் நோக்கில் இந்தக் கருத்தரங்குகள் வடக்கு–கிழக்கின் பல இடங்களிலும் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது என மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் தலைவர் யே.யாட்சன் பிகிறாடோ தெரிவித்தார்.