மட்டக்களப்பில் வயல் நிலத்துக்குள் சடலமாக கிடந்த குடும்பஸ்தர் .

 


தமிழர் பகுதியில் வயல் நிலத்துக்குள் சடலமாக கிடந்த குடும்பஸ்தர் - உறவினர்கள் கொடுத்த வாக்குமூலம்
58 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் (01.07.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர், 58 வயதுடைய, மூன்று பிள்ளைகளின் தந்தையான கந்தையா - நந்தகுமார் என்பவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
 (01.07.2026) மாலை தனது மாட்டிற்குப் புல் வெட்டுவதற்காகச் மட்டக்களப்பு - வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்காடு பகுதிக்கு சென்ற நபர், இரவு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் தேடிச் சென்றபோது, இரவு 7 மணியளவில் வயல் காணிக்குள் அவர் சடலமாகக் கிடப்பதைக் கண்டுள்ளனர். ​
சம்பவ இடத்திற்கு விரைந்த வெல்லாவெளி பொலிஸார் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்று(02.07.2026) காலை களுவாஞ்சிகுடி நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைவாக, திடீர் மரண விசாரணை அதிகாரி வீ.ஆர்.மகேந்திரன் சம்பவ இடத்திற்கு வருகை தந்து சடலத்தைப் பார்வையிட்டுள்ளனர்.
மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.