மட்டக்களப்பு கல்வி வலய அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் 100 நாள் செயற்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு கல்வி வலய பாடசாலைக்கிடையில் இரண்டு நாள் நடாத்தப்பட்ட கரம் சுற்றுப்போட்டிகளில்வெற்றிபெற்றவர்களுக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு பாலமீன் மடு விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் நடைபெற்றது
மட்டக்களப்பு கல்வி வலய உடற்கல்வி உதவிக்கல்விப்பணிப்பாளர்
வி.லவக்குமாரின்
ஆலோசனைக்கு அமைய மட்டக்களப்பு பாலமீன் மடு விக்னேஸ்வரா வித்தியாலய
உடற்கல்வி ஆசிரியர் செல்வி.கே லதா மற்றும் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் எஸ்
.விஜிகரன் ஆகியோரின் ஏற்பாட்டில் பாடசாலை அதிபர் சி எஸ் .மகரந்திரன்
தலைமையில் நடைபெற்ற இரண்டு நாள் கரம் சுற்றுப்போட்டிகளில் கலந்துகொண்டு
வெற்றிபெற்ற பாடசாலை மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வெற்றிபெற்ற
பாடசாலைகளுக்கு வெற்றி கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
பாடவிதான கற்றல் செயல்பாட்டுக்கு அமைய பாடசாலை மாணவர்களுக்கிடையில்
நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் முன்னெடுத்துள்ள 100 நாள் செயற்திட்டத்தின்
கீழ் பாடசாலைகளை முன்னிலைப்படுத்தி 360 மாணவர்களை கொண்ட 51 மாணவ
குழுக்களில் 12 ,14 ,16 ,19 வயதுடைய மாணவர்கள் போட்டிகளில்
கலந்துகொண்டுள்ளனர்
பரிசளிப்பு விழா நிகழ்வில் பிரதம அதிதியாக
பிரதிகல்விப்பணிப்பாளர் கே .ஹரிகரராஜ் ,சிறப்பு அதிதியாக தமிழ் மக்கள்
விடுதலை புலிகள் கட்சியின் இளைஞர் அணிச்செயலாளர் எஸ் ஃசுரேஷ்குமார் ,கௌரவ
அதிதியா ஒய்வு நிலை ஆசிரியர் வி.லோகநாதன் ஆகியோர் கொண்டு மாணவர்களுக்கான
சான்றிதழ்களையும் ,பாடசாலைகளுக்கான வெற்றிக்கிண்ணங்களையும் வழங்கி வைத்தனர்
இதேவேளை மாகாண மட்டத்தில் பாடசாலைகளுக்கிடையில் நடாத்தத்தப்பட்ட விளையாட்டுப்போட்டிகளில் பங்கு பற்றி வெற்றிபெற்ற பாலமீன் மடு விக்னேஸ்வரா வித்தியாலய மாணவர்களையும் இரண்டுநாள் நடத்தப்பட்ட கரம் சுற்றுப்போட்டிகளை ஒழுங்கமைப்பு செய்த பாலமீன் மடு விக்னேஸ்வரா வித்தியாலய உடற்கல்வி ஆசிரியர் செல்வி .கே லதா மற்றும் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் எஸ்.விஜிகரன் ஆகியோரையும் அதிதிகளினால் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது