இணைந்த கரங்கள் அமைப்பினால் விபுலானந்தா முன்பள்ளி பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் மற்றும் விளையாட்டு உபகரணம் வழங்கும் நிகழ்வானது பாடசாலையின் பொறுப்பாசிரியர் திருமதி.காளிதாசன் சிவாஜினி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இன் நிகழ்வில் ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய செயலாளர் வு.நிரோஜன், சமாதான நீதவான் செல்லத்தம்பி தங்கமலர், முன்பள்ளி ஆசிரியர் கிருஸ்ணன் சர்மிளா, முன்பள்ளி பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள்,இணைந்த கரங்கள் உறுப்பினர்களான திரு.லோ.கஜரூபன்,திரு.எஸ்.காந்தன், திரு.கி.சங்கீத், திரு.ரா.தஜன்,திரு.தமிழரன் சனா ஆகியோரினால் கல்விகற்கும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கி வைத்தனர்.
இப் பணிக்கு முழுதான நிதி பங்களிப்பை வழங்கிய, இணைந்த கரங்களுடாக கைகோர்த்து இடை விடாது நம் பயணத்தின் நோக்கத்தையும்,நம் மாணவச் செல்வங்களின் வலியையும் உணர்ந்து இணைந்த கரங்கள் உறவினர்களும் நண்பர்களும் இணைந்து வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது