திட்டமிட்டுச் செலவிடாதவரை, உங்கள் பணம் உங்களிடம் நீண்ட காலம் தங்காது .

 


திட்டமிட்டுச் செலவிடாதவரை, உங்கள் பணம் உங்களிடம் நீண்ட காலம் தங்காது என்பதை மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. அவசியம், அவசரம் என்ற இரண்டையும் பார்த்து வாங்குங்கள்.

எதை வாங்குவதாயினும், இது எனக்கு இப்பொழுது தேவைதானா என்று ஒரு தடவைக்கு இரண்டு தடவை உங்களைக் கேட்டுக் கொள்ளுங்கள்.

ஒன்றை வாங்குவதற்கு முன்பு, அதன் விலையை பலரிடம் விசாரித்து விட்டு வாங்குங்கள்..

கடன் உறவுக்குப் பகை என்பதை மறந்து விடாதீர்கள். கடன் வாங்கும்போது காட்டும் பணிவை அது திரும்பக் கேட்கப்படும்போது, காட்ட மாட்டார்கள்..எனவே முடிந்தவரை தவிர்த்தல், உங்கள் சேமிப்பிற்கு பாதுகாப்பு…

சேமிப்பு என்ற பழக்கம் இருக்கும் வரை, எதிர்காலத்தை நீங்கள் நம்பும்வரை, உங்கள் பணத்தின் ஆயுள் அதிகரிக்கும்.

பிறருக்காக செலவழிக்காது(அதாவது வெறும் காட்சிக்காகச் செலவிடாது) உங்கள் தேவைக்கு மாத்திரம் பணத்தைச் செலவிடப் பழகிக் கொள்ளுங்கள்..

தன்னை மதிப்பவரிடம் ஒட்டிக் கொள்வதும், மிதிப்பவரிடம் முகத்தை அஷ்ட கோணலாக வைத்திருப்பதும் பணத்தின் இயல்பு