முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, பாராளுமன்றத்துக்கு நுழைவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமென கொழும்பு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர் பதவியொன்றை பொறுப்பேற்றுக் கொள்ளும் வகையிலேயே அவர், தேசியப் பட்டியலின் ஊடாக பாராளுமன்றத்துக்குள் பிரவேசிக்க உள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியலின் ஊடாகவே அவர் எம்.பியாக பதவியேற்க உள்ளார் என்றும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்தப் பட்டியலின் ஊடாக பாராளுமன்றத்துக்குச் சென்றிருக்கும் ஒருவருக்கு, பெருந்தொகையில் நிதியைக் கொடுத்து அதனூடாகவே ரவி கருணாநாயக்க பாராளுமன்றத்துக்குள் பிரவேசிக்க உள்ளார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மேற்கோள் காட்டி, வாராந்த பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.