தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் திருகோணமலை ,அமைப்பாறை மாவட்ட மாணவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சின் தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனம் உளவளத்துணை டிப்ளோமா பாடநெறி துறைகளில் இளமானி மற்றும் பட்டபடிப்பின் கற்கை நெறிகளை வழங்கி வரும் உயர் கல்வி நிறுவனமான தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனம் 1978 இல் 16 இலக்கத்தின் பல்கலைக்கழக சட்டத்தின் 25 எ பிரிவின் கீழ் பட்டம் வழங்கும் நிறுவனமாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமாகும்.
இந்த நிறுவனத்தில் உளவளத்துணை டிப்ளோமா பாடநெறியின் 2021,2022 கல்வி ஆண்டில் பயின்றுகொண்டிருக்கும் திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் களப்பயிற்சிக்கான விஜயமொன்றினை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மேற்கொண்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள மாணவர்கள் தீரணியம் திறந்த பயிற்சி பாடசாலைக்கு வருகைதந்துள்ளனர்.
தீரணியம் திறந்த பயிற்சி பாடசாலையானது அதிபர் அருட்சகோதரர் மைக்கேல் தலைமையில் பணிப்பாளரும் ஆலோசகருமான உளநல வைத்திய ஆலோசனை வைத்திய அதிகாரி ஜூடி ரமேஷ் வழிகாட்டலில் கடந்த ஆறுவருடங்களுக்கு மேலாக ஓட்டிசம் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள பிள்ளைகளுக்கான பராமரிப்பு மற்றும் சிகிச்சை முறையிலான கற்றல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் ஒரு பாடசாலையாக இயங்கி வருகின்றது.
குறித்த பாடசாலைக்கு வருகை தந்துள்ள மாணவர்கள் ஓட்டிசம் பிள்ளைகளின் இயல்பான செல்பாடுகள் ,அவர்களின் கற்றல் நடவடிக்கைகள் ,அவர்களுடனான அணுகுமுறைகள் தொடர்பாக தெளிவூட்டலுடனான கலந்துரையாடல்கள் இடம்பெற்றது.
தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.டி ஆர் அத்தநாயக்க மற்றும் பணிப்பாளர் வரத கௌரி வாசுதேவன் ஆகியோரின் வழிகாட்டலின் உளவளத்துணை பயிற்றுவிப்பாளர் ஹமீட் தலைமையில் மேற்கொண்டுள்ள களப்பயிற்சிக்கான விஜயத்தில் பயிற்றுவிப்பாளர்களான நௌசாத் யாசீன்,நவராசா தர்சன் மற்றும் திருகோணமலை ,அமைப்பாறை தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தில் 2021, 2022 கல்வி ஆண்டில் பயின்றுகொண்டிருக்கும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.