வெண் பலகை கையளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.






 

 காத்தான்குடி மத்திய கல்லூரி பழைய மாணவர்களான பேர்ல் 94 வின் "கல்வி மேம்பாட்டு வேலைத் திட்டத்தின் ஓர் அங்கமாக காத்தான்குடி மத்திய கல்லூரிக்கு வெண் பலகை கையளிக்கும் நிகழ்வு  கல்லூரியின் பரீட் மண்டபத்தில் நடைபெற்றது.

பழைய மாணவர்களான பேர்ல் 94 உறுப்பினர் ஏ.டபிள்யூ.எம்.றமீஸ்  தலைமையில் நடைபெற்ற  நிகழ்வில் கல்லூரியின் அதிபர்  எம்.சீ.எம்.ஏ.சத்தார்,  பிரதி அதிபர் எம்.ஏ.நிஹால் அகமட் உட்பட பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், 91 சாதாரண தரம் மற்றும் 94 உயர்தர பிரிவு பழைய மாணவர்கள் என பலரும்   கலந்து கொண்டனர்.

காத்தான்குடி மத்திய கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற மீண்டும் பள்ளிக்கு போகலாம்  நிகழ்வில்  பேர்ல் 94 (பாடசாலையின்
 91 சாதாரண தரம் மற்றும் 94 உயர்தர பிரிவு பழைய மாணவர்கள் ) இனால்  வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைவாக பாடசாலை அதிபரிடம் வெண் பலகை கையளிக்கப்பட்டது.

பேர்ல் 94 அமைப்பு காத்தான்குடியினதும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் பல்வேறு சமூக நல வேலைத் திட்டங்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.