மீண்டும் எரி பொருள் விலை அதிகரிக்கப்படுமா ?

 


அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தில் புதியஎரி பொருள் வரி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த யோசனையின் பிரகாரம் எதிர்வரும் ஜனவரி மாதம் எரிபொருளின் விலை அதிகரிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

முன்னதாக எதிர்வரும் ஜனவரி - பெப்ரவரி மாதத்திற்குள் எரிபொருளின் விலை உயரும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.