சிறுவர் உளவள ஆற்றுப்படுத்தல் மற்றும் 2022ம் ஆண்டு தரம் ஐந்து மாணவர்களை புலமைப்பரீட்சைக்கு தயார்படுத்தல் பயிற்சி பட்டறை மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது .
மண்முனை வடக்கு பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரணையில் மண்முனை வடக்கு சமுர்த்தி மகாசங்க முகாமைத்துவ பணிப்பாளர் பிறைசூடி ஒருங்கிணைப்பில் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களின் தரம் ஐந்து மாணவர்களின் கற்றல் செயல்பாட்டினையும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான தயார்படுத்தலையும் முன்னெடுத்து வருகின்றனர்
இதன் ஒரு செயல்பாடாக மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பாடசாலைகளில் தெரிவு செய்யப்பட தரம் ஐந்து மாணவர்களின் உளவள ஆற்றுப்படுத்தல் பயிற்சி பட்டறையில் பிரதேச செயலாளர் .வாசுதேவன் தலைமையில் இன்று நடைபெற்றது
தரம் ஐந்து மாணவர்களுக்கான உளவள ஆற்றுப்படுத்தல் பயிற்சி பட்டறையில் வளவாளராக மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலக ஆசிரியர் ஆலோசகர் கேசவன் கலந்துகொண்டார் .





