கொழும்பில் நடைபெற்ற அகில இலங்கை தமிழ் மொழி தின போட்டியில் பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலை, களுவாஞ்சிகுடி மாணவர்கள் வில்லுப்பாட்டு நிகழ்வில் முதலிடம் பெற்று சாதனையை நிலைநாட்டியுள்ளனர்.
தம்பிப்பிள்ளை வேதுஜா, சிறீஸ்கந்தராஜா தனுஷ், தேவசகாயம் கோகுல், அருளானந்தம் கோசாரிதன், பரமலிங்கம் ஹரிநாத், வரதராஜன் சித்தர்சன், ஜெயக்குமார் சஞ்சயன், ஆகிய மாணவர்கள் இந்த வில்லுப்பாட்டு நிகழ்வில் கலந்து கொண்டனர்.
பாடசாலை அதிபர் எம்.சபேஸ்குமார் , பிரதி அதிபர் , உதவி அதிபர்கள் ஆகியோரின் வழிநடத்தலில் ஆசிரியர் வி.திவோஜன் அவர்களின் நெறிப்படுத்தலிலும் பயிற்றுவிப்பிலும் ஏனைய ஆசிரியர்களின் பங்களிப்பிலும் மாணவர்களின் திறமையிலும் இத் தேசிய மட்ட வெற்றி கிட்டியுள்ளது.