நேரடி நிகழ்நிலை படுத்தல் தொடர்பான நான்கு நாள் பயிற்சி செயலமர்வு மட்டக்களப்பில் நடைபெறுகின்றது .

 


மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச திணைக்களங்களின் நிதி கட்டுப்பாட்டு பிரிவில் கடமையாற்றும் உத்தியோகத்தர்க்களுக்கான நேரடி நிகழ்நிலை படுத்தல் தொடர்பான நான்கு நாள் பயிற்சி செயலமர்வு மட்டக்களப்பில் நடைபெறுகின்றது .

நிதி அமைச்சின் திறைசேரி அரச கணக்குகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் தேசிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிதி கட்டுப்பாட்டு பிரிவுக்கான புதிய நேரடி நிகழ்நிலை படுத்தல் செயல் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் மாவட்ட செயலகம் ,பிரதேச செயலகங்கள் ,போதனா வைத்தியசாலை ஆகிய நிதி கட்டுப்பாட்டு பிரிவுக்கான நான்கு நாள் பயிற்சி செயலமர்வு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெறுகின்றது

அரச கணக்குகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நான்கு நாள் நடத்தப்படுகின்ற செயலமர்வில் நிதி அமைச்சின் திறைசேரி அரச கணக்குகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்,சமந்த உப நந்த ,மேலதிக பணிப்பாளர் நாயகம் சுமேத மதநாயக, சிரேஷ்ட பயிறுவிப்பாளர் எ. ஆர் எம் .ரிஸ்மான் ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டுள்ளனர்