50 ஆண்டு நிறைவின் பொன்விழா நிகழ்வு.


 

மட்டக்களப்பு முதியோர் இல்லத்தின் தலைமைத்தாயாக பணியினை முன்னெடுத்து வரும் ஏழைகளின் சிறிய சகோதரிகள் சபையின் அருட்சகோதரி லூர்ட்ஸ் ஹென்றிடா அருட்சகோதரியாக திருநிலைப்படுத்தப்பட்டு 50 ஆண்டு நிறைவின் பொன்விழா நிகழ்வு இன்று மட்டக்களப்பு புனித சூசையப்பர் முதியோர் இல்லத்தில் நடைபெற்றது.

அருட்சகோதரி லூர்ட்ஸ் ஹென்றிடா தனது துறவற வாழ்வில் பொன்விழா சிறப்பு நிகழ்வாக மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை தலைமையில் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு தொடர்ந்து பொன்விழா நிகழ்வு சிறப்பிக்கப்பட்டது. மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் கிழக்குப்பல்கலைக்கழக விபுலானந்தா இசை நடன கல்லூரி மாணவர்களின் வரவேற்பு நடனத்துடன் பொன்விழா கேக் வெட்டப்பட்டு நிகழ்வு சிறப்பிக்கப்பட்டது.

அருட்சகோதரி லூர்ட்ஸ் ஹென்றிடா அருட்சகோதரியாக திருநிலைப்படுத்தப்பட்டு 50 ஆண்டு பொன்விழா நிகழ்வினை சிறப்பிக்கும் வகையில் கரித்தாஸ் எகெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் பாதுகாப்பான புலம்பெயர் அமைப்பின் நிதி பங்களிப்புடன் கிறிஸ்தவ மத அபிவிருத்தி திணைக்களம் இனைந்து வழங்கப்பட்ட முதியோர் இல்லத்திற்கான உலர்வுணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

பாதுகாப்பான புலம்பெயர் அமைப்பின் மத்திய கிழக்கு நாடுகளின் செயல்பாட்டாளரான அருட்பணி சிறியான் அடிகளாரின் உதவியுடன் கரித்தாஸ் எகெட் நிறுவனத்துடன் கிறிஸ்தவ மத அபிவிருத்தி திணைக்களம் இனைந்து முன்னெடுத்துள்ள செயல் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு புனித சூசையப்பர் முதியோர் இல்லத்திற்கும் .வாழைச்சேனை குட் ச பெட் சிறுவர் இல்லத்திற்கும் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு புனித சூசையப்பர் முதியோர் இல்லத்தில் இடம்பெற்ற ஏழைகளின் சிறிய சகோதரிகள் சபையின் அருட்சகோதரி லூர்ட்ஸ் ஹென்றிடா அருட்சகோதரியாக திருநிலைப்படுத்தப்பட்டு 50 ஆண்டு நிறைவின் பொன்விழா நிகழ்வில் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர்
ஜோசப் பொன்னையா ஆண்டகை உட்பட மட்டக்களப்பு மாவட்ட செயலக கிறிஸ்தவ மத அபிவிருத்தி திணைக்கள பிரிவு உத்தியோகத்தர ரேகா நிரூபன் ,அருட்தந்தையர்கள் ,அருட்சகோதரர்கள் ,அருட்சகோதரிகள் .அருட்சகோதரியின் குடும்ப உறுப்பினர்கள் , முதியோர் இல்லத்தில் ஊழியர்கள் என பலர் கலந்துகொண்டனர்