புலமைப்பரிசில் பரீட்சையில் தமிழ் மொழி மூலம்; 2021ம் ஆண்டு சித்தியடைந்த மாணவர்களை கௌரவித்து பாராட்டும் நிகழ்வு நடை பெற்றது.

 


கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தினால் மட்டக்களப்பு, மற்றும் பொலனறுவை மாவட்டங்களில் புலமைப்பரிசில் பரீட்சையில் தமிழ் மொழி மூலம்; 2021ம் ஆண்டு சித்தியடைந்த மாணவர்களை கௌரவித்து பாராட்டும் நிகழ்வு ஹிஸ்புல்;லாஹ் மண்டபத்தில் நடை பெற்றது.

மட்டக்களப்பு, மற்றும் பொலனறுவை மாவட்டங்களில் புலமைப்பரிசில் பரீட்சையில் தமிழ் மொழி மூலம்; 2021ம் ஆண்டு சித்தியடைந்த 600க்கு மேற்பட்ட மாணவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்

கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தினால் 18வது வருடமாக நடாத்தப்பட்ட இந்த நிகழ்வில் புலமை தாரகை 2021 எனும் நூலும் வெளியீட்டு வைக்கப்பட்டது.கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தின் இணைப்பாளர் தேசமான்ய மீராசாகிப் அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த வைபவத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

இந்த வைபவத்தில் உள்நாட்டு இறைவரித்திணைக்களத்தின் கிழக்கு மாகாண சிரேஷ்ட ஆணையாளர் எம்.கணேசராஜா, காந்திசேவா சங்கத்தின் தலைவர் கலாநிதி ஏ.செல்வேந்திரன், சட்டத்;தரணி முகைதீன் சாலி, சட்டத்தரணி ஏ.உவைஸ் காத்தான்குடி மீராபாலிகா மகா வித்தியாலய தேசிய பாடசாலை அதிபர் அஷ்ஷெய்க் எம்.மன்சூர் மற்;றும் விமானப்படை அதிகாரி உட்பட கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தின் முக்கியஸ்தர்கள் அதிபர்கள் கல்வியலாளர்கள்; பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது மாணவர்களுக்கு பதக்கம் அணிவி;க்கப்பட்டு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட அதிதிகளுக்கும் பதக்கம் அணிவிக்கப்பட்டது.

கல்;வி அபிவிருத்தி ஒன்றியத்தினால் புலமைப்பரிசில் பரீட்சையில் தமிழ் மொழி மூலம்; ஆண்டு தோறும் சித்தியடைந்தியடையும் மாணவர்களை கௌரவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.