வண்ணத்துப்பூச்சி சமாதானப் பூங்காவின் ஏற்பாட்டில் மாயச் சித்திரம் வரையும் நிகழ்வு இன்று சிறப்பாக நடைபெற்றது.











































வண்ணத்துப்பூச்சி சமாதானப் பூங்காவின் ஏற்பாட்டில் இன்று 11.02.2026 மாலை 3.00மணிக்கு மட்டக்களப்பு அரசடியில் அமைந்துள்ள மாவட்ட கூட்டுச் சபைக் கட்டிடத்தில் அருட்தந்தை போல் சற்குணநாயகம் தலைமையில் மாவட்ட கூட்டுறவு சங்க தலைவர் திரு.க.ஜெகநாதன் அவர்கள் விருந்தினராக கலந்து கொள்ள மாவட்ட கூட்டுறவு சபையின் செயலாளர் திருமதி. தர்ஷினி மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்,  வைத்திய கலாநிதி அகிலன் ஆகியோரோடு  கூட்டுறவுக் காப்பறுதி முகாமையாளர்,  மட்டக்களப்பு சிக்கனக் கூட்டுறவு சங்க செயலாளர்,   ஜெபார்ஜீஸ் இன்டர்நேஷனல்   முகாமையாளர் மற்றும் சில அழைப்பு அதிதிகளின் பிரசன்னத்துடன் மாய சித்திரம் வரையும் நிகழ்வு மிகச் சிறப்பாக தொடங்கி வைக்கப்பட்டது. 

மாய சித்திரம் வரைதலானது  வருகை தந்திருந்த அனைவரின் பங்களிப்போடும் கோடுகளாக வரையப்பட்டு, அதிலிருந்து அழகியல் நிறைந்த சித்திரம் ஒன்று அடையாளம் காணப்படுகின்றது. 

 உள்ளத்தில் எழும் சவால் மிக்க எண்ணங்களை நேர்மறையான எண்ணங்களாக மாற்றுவதற்கு  மாய சித்திரம் வரைதல் ஒரு சிறந்த உளவியல் மீட்சிச் செயற்பாடாகும்.

இன்றைய நிகழ்வில் வருகை தந்திருந்த அனைவரும் இணைந்து மாய சித்திரம் வரைதலை ஆரம்பித்து வைத்தனர்.

இன்று வண்ணத்துப்பூச்சி சமாதான பூங்காவினால் ஆரம்பிக்கப்படும் இந்த மாயச் சித்திரம் வரையும் நிகழ்வு, தொடர்ந்து மிக சிறப்பாக முன்னெடுக்கப்பட இருக்கின்றது.

இதன் ஒரு செயற்பாடாக இல்லங்களில் மாய சித்திரம் வரைவதற்கு வண்ணத்துப்பூச்சி சமாதானப் பூங்காவினர் தயாராக உள்ளனர். தேவையானவர்கள் தொடர்பு கொள்ள முடியும்.

தொடர்ந்து எதிர்வரும் ஏப்ரல் மாதம் பாரிய கண்காட்சி ஒன்றும் மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக எதிர்வரும் ஆகஸ்ட் மாதம்  கொழும்பில் கலைத்துவம் மற்றும் வர்த்தக ரீதியாக மாய சித்திரக் கண்காட்சி நடைபெறவுள்ளது. 

வண்ணத்துப்பூச்சி சமாதான பூங்காவினர் தமது முப்பதாவது வருட மகிழ்வின் கொண்டாட்டத்தை பல்சரப்பட்ட செயற்பாடுகளால் அனுசரித்துவருகின்றன.

வண்ணத்துப்பூச்சி சமாதான பூங்காவுடன் இணைந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் உடனடியாக பயனியர் வீதியில் அமைந்துள்ள வண்ணத்துப்பூச்சி சமாதானப் பூங்காவின் தலைமை அலுவலகத்துக்குச் சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இணையூமாறு அன்போடு அழைக்கின்றனர்.