களுவாஞ்சிக்குடியில் பொலிசாரின் திடீர் நடவடிக்கையில் கசிப்பு தயாரிப்பு மற்றும் கசிப்பு கடத்தல் ஈடுபட்ட 2 பெண்கள் உட்பட 7 பேர் கைது பெருமளவிலான கசிப்பு மீட்பு .

 




(கனகராசா சரவணன்)


களுவாஞ்சிக்குடி பொலிசார் பிரிவிலுள்ள மகளூர், நாகபுரம் பிரதேசங்களில் கசிப்பு உற்பத்தி ஈடுபட்ட மற்றும் காஞ்சரம்குடாவில் இருந்து களுவாஞ்சிக்குடி பகுதிக்கு  கசிப்பு கடத்தலில் ஈடுபட்ட சம்பவங்களில் இரு பெண்கள் உட்பட 7 பேரை நேற்று சனிக்கிழமை (26) கைது செய்ததுடன் பொருமளவிலான கசிப்பு மற்றம் கசிப்பு உற்பத்தி உபகரணங்கள், மோட்டர்சைக்கிள் 3 என்பன மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்தனர்.

பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான நேற்று பகல் கொக்கட்டிச்சோலை காஞ்சரம்குடா பகுதியில் இருந்து களுவாஞ்சிக்குடி பகுதிக்கு இரண்டு மோட்டர் சைக்கிளில் சுமார் 40 லீற்றர் கசிப்பை வியாபாரத்துக்காக எடுத்துவந்த நிலையில் பழுகாமம் பகுதியில் வைத்து 3 பேரை கைது செய்ததுடன் கசிப்பு மற்றும் 2 மோட்டர்சைக்கிள்களை மீட்டனர்.

இதனை தொடர்ந்து மகளூர், நாகபுரம் பகுதிகளில் கசிப்பு உற்பத்தி நிலையங்களை முற்றுகையிடும் திடீர் நடவடிக்கையின் போது வீடுகளில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 3 வீடுகளை முற்றுகையிட்டு அங்கு ஒரு பெண் உட்பட 3 பேரை கைது செய்ததுடன் பெருமளவிலான கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்திக்கான உபகரணங்களான காஸ்சிலின்டர்களை மீட்டனர்.

அதேவேளை பழுகாமம் பகுதியில் இருந்து களுவாஞ்சிக்குடி பிரதேசத்திற்கு மோட்டர்சைக்கிளில் கசிப்பு கடத்திய ஒருவரை பட்டிருப்பு பொலிஸ் சோதனைசாவடியில் வைத்து கைது செய்துள்ளதுடன் அவ்வாறே கசிப்பு கடத்தலில் ஈடுபட்ட பெண் ஒருவரையும் கைது செய்தனர்.

தொடர்ச்சியாக கசிப்பு வியாபாரம் தயாரிப்பு தொடர்பாக முறைப்பாடு கிடைத்ததையடுத்து இந்த  திடீர் சோதனை நடவடிக்கையில் 2 பெண்கள் உட்பட 7 பேரை கைது செய்துள்ளதுடன் பெருமளவிலான கசிப்வு மற்று; கசிப்பு தயாரிப்பதற்கான உபகரணங்கள் மோட்டர்சைக்கிள் என்பன மீட்டுள்ளதூகவும் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.