மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமர் ஆசனத்தில் அமர வைப்பதற்கான நடவடிக்கைகளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னெடுத்துள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்களை மேற்கோள்காட்டி, செய்திகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில், மஹிந்த மீண்டும் பிரதமராவது சாத்தியமா? என்ற கேள்விக்கு சர்வதேச ஊடகமான பிபிசி தமிழுக்கு கருத்து தெரிவித்துள்ள மூத்த பத்திரிகையாளரும், அரசியல் ஆய்வாளருமான ஆர்.சிவராஜா, “இப்போதைக்கு பிரதமராவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. அவர்கள் அதற்கு முயற்சி எடுக்கிறார்கள். ஆனாலும், அது சாத்தியம் இல்லை. பொதுஜன பெரமுன நடத்திய கூட்டங்களில் எல்லா இடங்களிலும் எதிர்ப்புகள் வெளியிடப்படுகின்றன. இப்படி எதிர்ப்புகள் வந்தால், இப்போது இருக்கின்ற நிலைமையும் குறைவடைந்து விடும் என ஜனாதிபதி தரப்பினர் பயப்படுகின்றார்கள். அதனால், உடனடியாக பிரதமர் பதவியில் மாற்றங்கள் செய்தவற்கு உடன்பாடு இல்லை.” என்று கூறியுள்ளார்.