எரிபொருள் விலை குறைவடையும் என எதிர்பார்த்து எரிபொருளுக்கான கோரலை செய்யாத எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு தண்டனையாக 03 நாட்களுக்கு எரிபொருளை வழங்குவதில்லை என பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இதன் காரணமாக நாடளாவிய ரீதியில் சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டிருந்ததோடு, சில எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசைகளும் காணப்பட்டன.
இந்த தண்டனை நடவடிக்கை காரணமாக வாடிக்கையாளர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்க
நேரிட்டதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர்
கபில நாவுதுன்ன தெரிவித்தார்.