அரசாங்கத்தின் ஒரே எதிர்பார்ப்பு தமிழ் புலம் பெயர் மக்கள் மாத்திரமே - உதய கம்மன்பில

 


இலங்கைக்கு தொடர்ந்தும் நிதியுதவிகளை வழங்க முடியாது என இந்தியா அறிவித்துள்ளது. அதேவேளை சீனாவுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவது தொடர்ந்தும் ஒத்திவைக்கப்பட்டு வருவதால், உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் வரை சீனாவின் உதவியும் கிடைக்காது என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். 

இவ்வாறான நிலையில், போர் ஒன்றில் சிக்கியுள்ளதால் ரஷ்யாவும் உதவ முடியாது என அறிவித்துள்ளது. பொருளாதார நெருக்கடி காரணமாக ஐரோப்பாவாலும் உதவ முடியாது.

கடந்த காலத்தில் இருத்தரப்பு உறவுகளில் சிறிது பாதிப்பு ஏற்பட்ட ஜப்பான் கடனை மறுசீரமைக்க மாத்திரமே இணங்கியுள்ளது. கடனை மறுசீரமைக்கும் வரை சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவியையும் எதிர்பார்க்க முடியாது.

இவ்வாறான நிலைமையில் அரசாங்கத்தின் ஒரே எதிர்பார்ப்பு தமிழ் புலம் பெயர்  மக்கள்  மாத்திரமே” எனவும் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.