கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

 


அனுராதபுரம் – கட்டுகெலியாவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று  முற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கூரிய ஆயுதத்தால் கழுத்துப் பகுதியில் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். 35 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான உதித்த எரன்ன ஜயதிலக்க என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

 இரண்டு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற தகராறே குறித்த கொலைக்கான காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்..