அழகியல் தின போட்டியின் பிரதான ஆரம்ப நிகழ்வு மட்டக்களப்பு மகாஜன கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

 


கிழக்கு மாகாண வரலாற்றில் முதல்தடவையாக இடம்பெற்ற மாகாண மட்ட அழகியல் தின போட்டியின் பிரதான ஆரம்ப நிகழ்வு மட்டக்களப்பு மகாஜன கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நேற்று  நடைபெற்றது

கிழக்கு மாகாண கல்வித்திணைக்களத்தின் அழகியல் பாடங்களுக்கான உதவிக்கல்விப்பணிப்பாளர்
எஸ்.ஸ்ரீதரனின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் .நகுலேஸ்வரி புள்ளைநாயகம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்
இந்நிகழ்விற்கு சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு கல்வி வலயத்தின் கல்விப்பணிப்பாளர் .குலேந்திரகுமார் சுஜாதா, மாகாண பிரதிக்கல்விப் பணிணிப்பாளர் (திட்டமிடல்)ஆர்.நிர்மலரஞ்ஞன், மாகாண கல்வித்திணைக்கள உயர் அதிகாரிகள், வலயக் கல்விப் பிரதிப்பணிப்பாளர்கள், உதவிக்கல்விப்பணிப்பாளர்கள், மகாஜன கல்லூரியின் அதிபர் அருமைராஜா, ஆசிரிய ஆலோசகர்கள், நடுவர்கள் மற்றும் பாடசாலைகளின் அதிபர்கள், பிரதி அதிபர்கள் , ஆசிரியர்கள் கலந்து சிறப்பித்தனர்

தமிழ் பண்பாட்டு கலாசார வாத்தியங்கள் இசைத்து அதிதிகளுக்கு மலர் மாலை அணிவித்து பிரதான மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டன .தொடர்ந்து பிரதான நிகழ்வு மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய இறைவணக்கத்துடன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு மாணவர்களின் வரவேற்பு நடனத்துடன் நிகழ்வு சிறப்பிக்கப்பட்டன

இதனை தொடர்ந்து மாணவர்களின் நடன ஆற்றுகையுடன் பிரதம அதிதி உரை இடம்பெற்றது அதனைத் தொடர்ந்து அழகியல் தினப் போட்டிகளில் நடுவனம் வகிக்கவுள்ள நடுவர்களுக்கான அறிவுறுத்தலின் பின்னர் போட்டி நிகழ்வுகள் ஆரம்பமாகி இடம்பெற்றுள்ளது.

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாரை, திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த பாடசாலைகளைச் சேர்ந்த அழகியல் பாடங்களுக்கான மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்றிருந்தனர்.

இக் கிழக்கு மாகாண மட்ட அழகியல் தின போட்டியில், கோட்ட மட்டங்களில் வெற்றிபெற்று, மாவட்ட மட்டத்தில் வெற்றிபெற்ற பாடசாலை மாணவர்கள் இதில் கலந்துகொண்டதுடன், இதில் குழு நடனம், தனி நடனம் மற்றும் குழுப்பாடல், தனிப்பாடல் ஆகிய போட்டிகள் இடம்பெற்றன.

அழகியல் பாடங்களுக்கான போட்டி நிகழ்வானது இன்றும் நாளையும் மகாஜனா கல்லூரியில் இடம்பெறவுள்ளதுடன், சிங்கள மொழி மூல மாணவர்களுக்கான போட்டிகள் எதிர்வரும் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் தெய்யத்தகண்டியிலும், முஸ்லிம் மாணவர்களுக்கான சங்கீத போட்டிகள் எதிர்வரும் 29 திகதி இடம்பெறவுள்ளது.
இதேவேளை இம் மாகாண மட்ட போட்டிகளில் வெற்றியீட்டும் பாடசாலைகளை சேர்ந்த மாணவர்கள் கொழும்பில் நடைபெறவுள்ள தேசிய மட்ட போட்டிகளில் பங்கேற்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.