கந்தசஷ்டி இறுதி நாள் விரத பூஜையின் சூரசம்ஹாரம்; நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.


 

 

 கந்தசஷ்டி இறுதி நாள் விரத பூஜையின் சூரசம்ஹாரம்; நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

உலகளாவிய ரீதியில் இந்து ஆலயங்களில் இன்று கந்தஷஷ்டி விரத்தின் மிக முக்கியத்துவம் வாய்ந்த சூரன் போர் என அழைக்கப்படும் சூரசம்ஹாரம்; நிகழ்வுகள் மிக பக்திபூர்வமாக சிறப்பாக நடைபெற்றது.

சூரபத்மன் என்னும் அரக்கனை அழித்து தர்மத்தினை நிலைநாட்டியதை குறிக்கும் வகையில் கந்தஷஷ்டி விரதம் அனுஸ்டிக்கப்பட்டு சூரசம்ஹாரம்; நிகழ்வு நடாத்தப்படுகின்றது

கந்த ஸஷ்டி விரத்தின் மிக முக்கியத்துவமான நிகழ்வான
சூரம்சம்ஹாரத்தினை முன்னிடடு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இந்து ஆலயங்களில் இன்று மாலை விசேட பூஜை வழிபாடுகளுடன் சூரசம்ஹாரம்; நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது.

அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு பாலமீன்மடு –திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலயம்,மட்டக்களப்பு இருதயபுரம் மேற்கு அருள்மிகு ஸ்ரீ பால முருகன் ஆலயம் மற்றும் மட்டக்களப்பு புளியந்தீவு ஆனைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரர் ஆலயங்களில் விசேட பூஜைகள் நடைபெற்று முருகன் பெருமான் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு சூரசம்ஹாரம்;; நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

இன்று ஆலயங்களில் நடைபெற்ற சூரசங்காரம் நிகழ்வு பெருமளவான பக்தர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது