கனடா ஒன்ராறியோவில் டார்ஹாம் (Durham) பிராந்தியப் காவல்
பிரிவுக்குட்பட்ட பகுதியில் அருந்தகம் ஒன்றுக்கு வெளியே 28 வயதுடைய தமிழ்
இளைஞர் ஒருவர் கத்தி குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
இந்தக் கொலைச் சம்பவம் உள்ளூர் நேரப்படி வெள்ளி – சனி நள்ளிரவுக்குச் சற்றுப் பின்னர் இடம்பெற்றுள்ளதாக டார்ஹாம் காவல்துறை தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர் இவர் ஒரு சிறந்த உதைபந்தாட்ட வீரர் என்றும் தமிழ்த் தேசிய விளையாட்டு அணிகளில் துடிப்புடன் பங்குபற்றி வந்தவர் எனவும் கூறப்படுகின்றது.





