கவிஞர் முறையூர் மங்கேஸ்வரன் எழுதிய புதுக்கவிதை நூல்கள் இரண்டு செங்கலடியில் வெளியிடப்பட்டன .


 

கவிஞர் முறையூர் மங்கேஸ்வரன் எழுதிய புதுக்கவிதை நூலான ‘மனதோடு பேசும் மௌனங்கள்’ மற்றும் ஹைக்கூ கவிதை நூலான ‘மகிழம் பூக்கள்’ ஆகிய கன்னி நூல்களின் வெளியீட்டு விழா இன்று மட்டக்களப்பு -செங்கலடி பிரதேசத்தில் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

சந்திவெளி -தமிழ்ச்சங்கம் பாரம்பரிய கிராமிய கலை மன்றத்தின் ஏற்பாட்டில் முறக்கொட்டாஞ்சேனை ராமகிருஸ்ண மிஷன் வித்தியாலய அதிபர் எம். தவநேசன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் கல்குடா வலயக்கல்விப்பணிப்பாளர் தினகரன் ரவி, கிரான் பிரதேச செயலாளர் ராஜ்பாபு ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.
முத்தமிழ் கலைஞன் பா. கதீஸ்வரன் இங்கு வரவேற்புரை நிகழ்த்தினார்.

மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா இசை நடனக்கல்லூரின் விரிவுரையாளர் மோகனதாசன் கவிதை நூல்களுக்கான நயவுரையையும் ஆசிரிய வள நிலையத்தின் விரிவுரையாளர் திருமதி சுதாகினி டெஸ்மன் ராகல் ஆய்வுரையையும் நிகழ்த்தினர்.
மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு பொதுநல அமைப்புக்கள் , கவிஞர் மற்றும் கலைஞர் குழுக்கள் நூலாசிரியருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தன.
இவ்விழாவில் பங்கேற்ற அதிதிகளுக்கு நினைவுச்சின்னங்கள் கையளிக்கப்பட்டன.

கடந்தகால அசாதாரண சூழ்நிலையின்போது புலம்பெயர்ந்து ஐக்கிய இராஜ்யத்தில் குடியுரிமை பெற்றுள்ள நூலாசிரியர் கவிஞர் முறையூர் மங்கேஸ்வரன் பாடசாலை பருவத்திலிருந்தே கவிதை எழுதுவதில் நாட்டம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.