மட்டக்களப்பு எகெட் சூழல் பாதுகாப்பு குழு ஏற்பாட்டில் செடெக் நிறுவனத்துடன் இணைந்து மிசூரியர் நிதி அனுசரணையில் இலங்கையின் இயற்கை சூழலை பாதுகாப்பாதற்கான படிக்கல் எனும் தொனிப்பொருளில் பசுமையான உலகை உருவாக்க நாம் ஒன்றிணைவோம் செயல்திட்டத்தில் தொடர்ச்சியாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்தி செயல்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன
அந்தவகையில் நீர் நிலைகளை சுத்தமாக்கி நீர்வளம் காத்திடுவோம் எனும் கருப்பொருளில் கரித்தாஸ் எகெட் நிறுவகத்தின் செயற்திட்டத்தின் கீழ் ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கோப்பாவெளி வெளிக்காகண்டி கிராம சேவையாளர் பிரிவில் இயங்கிவரும் வரும் குறிஞ்சி சூழல் பாதுகாப்பு குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க பொதுமக்களுக்கான குடிநீர் கிணறு அமைக்கப்பட்டு பொதுமக்களின் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது .
மட்டக்களப்பு எகெட் சூழல் பாதுகாப்பு செயல்திட்ட இணைப்பாளர் சொலமன் ஒழுங்கமைப்பில் எகெட் நிறுவன இயக்குனர் அருட்பணி
ஏ.ஜேசுதாசன்
தலைமையில் பொதுமக்களுக்கான குடிநீர் கிணறு கையளிக்கும் நிகழ்வில் மரங்களை
நடுவோம் வரங்களை பெறுவோம் எனும் கருப்பொருளில் மரக்கன்றுகள் நாடும்
நிகழ்வும் இன்று இடம்பெற்றது
நிகழ்வில் எகெட் வெளிக்கள உத்தியோகத்தர் எம்.றொபின்சன் ,கிராம அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் , கிராம மாத அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள்,கிராம மக்கள்,மட்டக்களப்பு கரித்தாஸ் எகெட் நிறுவன ஊழியர்கள் என பலர் கலந்துகொண்டனர்





