வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள 5 ஆம் வட்டார கிராமத்தில் வீடொன்றி
ல் மறைத்து வைக்கப்பட்டிருந்த கட்டுத்துப்பாக்கியினை விசேட அதிரடிப் படையினர் மீட்டுள்ளனர்.வாகரை பிரதேச இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து விசேட அதிரடிப்படையினரின் கவனத்திற்கு தெரியப்படுத்தியதனை அடுத்து குறித்த வீட்டிற்கு சென்ற அதிரப்படையினர் அதனை மீட்டுள்ளதுடன் சந்தேக நபரை கைது செய்து வாகரை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் சந்தேக நபர் மற்றும் கட்டுத்துப்பாக்கியினை வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.





