மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பட்டிருப்பு மகாவித்தியாலய தேசிய பாடசாலையில்ஆங்கில மொழிப்போட்டிகள் நடைபெற்றது.

 


 

கிழக்கு மாகாண ஆங்கில மொழிப்போட்டிகள் மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பட்டிருப்பு மகாவித்தியாலய தேசிய பாடசாலையில் மாகாண கல்விப்பணிப்பாளர் நகுலேஸ்வரி புள்ளநாயகம் தலைமையில் இன்று நடைபெற்றது.

களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் இருந்து பேண்ட் வாத்தியம் முழங்க அதிதிகள் மலர்மாலை அணிவித்து வரவேற்கப்பட்டனர். இதில் கிழக்கு மாகாணத்திலுள்ள நான்கு கல்வி மாவட்டங்களில்; இருந்தும் மாகாண போட்டிக்கு தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளின் மாணவர்கள் கலந்து கொண்டனர். மாகாண ஆங்கில மொழித்தின போட்டிகள் இம்முறை முதல் முறையாக பட்டிருப்பு கல்வி வலயத்தில் நடைபெறுகின்றனமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் மாகாண கல்வி அபிவிருத்தி பிரிவின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.நிமலரஞ்சன், பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதிக்கல்விப் பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார் மாகாண ஆங்கில பாட உதவிக்கல்விப் பணிப்பாளர் எம்.வடிவேல் உட்பட மாகாண கல்வி அதிகாரிகள், அதிபர்கள் ஆசிரியர்கள், மாணவர்கள்; பலர் கலந்து கொண்டதுடன்