கோப்பாவெளி வெளிக்காகண்டி கிராம சேவையாளர் பிரிவில் உள்ள வெண்மதி பன்
பாய் கைத்தறி நிலையத்தினை புனர்
நிர்மாணம் செய்து தருமாறு கிராம மக்கள்
வேண்டுகோள் விடுக்கின்றனர்.
ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலக பிரிவின் கோப்பாவெளி வெளிக்காகண்டி கிராம சேவையாளர் பிரிவில் வறுமைக்கோட்டின்கீழ் வாழும் பெண்தலைமைதாங்கும் குடும்ப பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடும் வகையில் புதிய வாழ்வு நிறுவனத்தின் ஊடாக சுயதொழில் ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் அய்யாதுரை சிவசாமி ஆசிரியரின் நிதி பங்களிப்பில் அமைக்கப்பட்ட வெண்மதி பன் பாய் கைத்தறி நிலையம் எட்டு பெண்தலைமைதாங்கும் குடும்ப பெண்களின் தலைமையில் இயங்கி வருகின்றன.
தற்போதைய பொருளாதார நெருக்கடியான சூழ் நிலையில் பின்தங்கிய நிலையில் காணப்படும் கோப்பாவெளி வெளிக்காகண்டி கிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் காட்டு யானைகளின் தாக்குதலில் சேதமடைந்து காணப்படும் குறித்த பன் பாய் கைத்தறி நிலையத்தினை புனரமைப்பு செய்து நிலையத்திற்கான பாதுகாப்பு சுற்று யானை வேலி அமைத்து கிராம மக்களின் சுயதொழில் ஊக்குவிப்புக்கான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர் .
குறித்த பன் பாய் கைத்தறி நிலையம் தொடர்பாக எமது செய்தி பிரிவுக்கு கருத்து தெரிவித்த பெரியபுல்லுமலை செல்வராசா அமுதினி.





